ஆணாதிக்கம் தடையாக இருந்திருந்தால் இந்திரா காந்தி எப்படி பிரதமர் ஆகியிருப்பார்..? நிர்மலா சீதாராமன் கேள்வி

பெங்களூரு: பெண்கள் சாதிக்க விரும்புவதை ஆணாதிக்கம் தடுத்திருந்தால், இந்திரா காந்தி எப்படி பிரதமர் ஆகியிருப்பார் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பெங்களூரு சிஎம்எஸ் பிசினஸ் ஸ்கூலில் மாணவர்களை சந்தித்து உரையாடிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த கேள்விக்கு, ‘கவர்ச்சிகரமான வாசகங்களில் மயங்கிவிடாதீர்கள். நீங்கள் (பெண்கள்) உங்களுக்காக நின்று தர்க்கரீதியாக பேசினால், உங்கள் கனவுகளையும் இலக்குகளையும் அடைவதை ஆணாதிக்கம் தடுக்காது.

பெண்கள் சாதிக்க விரும்புவதை சாதிக்க ஆணாதிக்கம் தடையாக இருந்திருந்தால், இந்திரா காந்தி எப்படி பிரதமர் ஆகியிருப்பார். ஆனாலும், பெண்களுக்கு போதிய வசதிகள் இல்லை. கூடுதல் வசதிகள் கண்டிப்பாக தேவை. மோடி அரசு புதுமையாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்கிவருகிறது. அவர்களுக்கான திட்டங்களை உருவாக்குவது மட்டுமல்லாது, அவர்களுக்கான மார்க்கெட்டை உருவாக்குவதையும் உறுதி செய்கிறோம்’ என்றார்.

The post ஆணாதிக்கம் தடையாக இருந்திருந்தால் இந்திரா காந்தி எப்படி பிரதமர் ஆகியிருப்பார்..? நிர்மலா சீதாராமன் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: