பெங்களூரு: கர்நாடகா முதல்வர் சித்தராமையா எக்ஸ் தளத்தில் , ‘பிரதமர் மோடி குஜராத்துக்கு ஆதரவாக செயல்படுவது தெளிவாக தெரிகிறது. முக்கியமான உற்பத்தி ஆலைகள் குஜராத்தில் நிறுவப்பட்டு, அதிகமான முதலீடுகள் குஜராத்தில் செய்யப்படுகின்றன. கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, போன்ற செழிப்பான மாநிலங்களிலிருந்து விலக்கப்பட்டு, அந்த முதலீடுகள், மானியங்கள் அனைத்தும் ஊக்கத்தொகைகளுடன் குஜராத்துக்கு வழங்கப்படுகின்றன. பாஜ எம்.பிக்களின் மவுனம் மாநிலத்திற்கு செய்யும் துரோகம் ஆகும். அவர்கள் மாநில நலனுக்காக மவுனம் கலைக்க வேண்டிய நேரம் இது. கர்நாடகா மற்றும் தென் மாநிலங்களின் நலனுக்காக குரல் கொடுக்க வேண்டும்’ என்றார்.
The post குஜராத்துக்கு ஆதரவாக செயல்படுகிறார் மோடி: சித்தராமையா தாக்கு appeared first on Dinakaran.