ஆசிய சாம்பியன்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் தொடங்கியது; விளையாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஆசிய சாம்பியஷிப் ஆடவர் ஹாக்கி போட்டி தொடங்கியது. ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் இன்று முதல் ஆகஸ்டு 12ம் தேதி வரை ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறுகிறது. ஹாக்கி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், தென்கொரியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளன.

இன்றைய தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் தென் கொரியாவும், ஜப்பான் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணிகளும் இதுவரை 20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் தென் கொரியா 16 போட்டிகளில் வெற்றியும், ஜப்பான் 2 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது. இரு அணிகளுக்குமான 2 போட்டிகள் சமனில் முடிவடைந்துள்ளது. மாலை 6.15 மணியளவில் மலேசியா – பாகிஸ்தான் அணிகளும், இரவு 8.30 மணியளவில் இந்தியா – சீனா அணிகளும் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடுகின்றன.

ஆகஸ்டு 12ம் தேதி இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. புகழ்பெற்ற இந்த ஹாக்கிப் போட்டி 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் நடப்பதால் விளையாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2023 கோப்பை மற்றும் லோகோவும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. யானை வடிவில் பொம்மன் என்ற லோகோ அமைக்கப்பட்டு உள்ளது நினைவுகூரத்தக்கது.

The post ஆசிய சாம்பியன்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் தொடங்கியது; விளையாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: