அரியலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பிரச்சார குழு: மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார்

அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்தில் இன்று (20.02.2024) பெண் குழந்தைகள் பாதுகாப்பு பிரச்சார குழு மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணாவால் தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட சமூக நலத்துறை மூலம் இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பஸ் நிலையம் அருகில் தொடங்கி வைக்கப்பட்டது.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குழந்தை திருமணத்தை தடுத்தல்,1098 குழந்தைகள் உதவி மைய செயல்பாடு, பெண் குழந்தை பாலியல் சீண்டல், போக்சோ பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த பிரச்சாரக் குழு அரியலூர் மாவட்டம் வருகை தந்துள்ளதை தொடங்கி வைத்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் துண்டு பிரசுரங்களை பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் ஆண்டிமடம் வட்டாட்சியர் இளவரசன், வட்டார வளர்ச்சி அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி திட்ட அலுவலர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்முருகன்,வட்டார கல்வி அலுவலர் சந்திரலேகா மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post அரியலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பிரச்சார குழு: மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: