அரியலூரில் பலத்த காற்றுடன் மழை-மரம் முறிந்ததில் ஓட்டுவீடு, மின்கம்பம் சேதம்

தா.பழூர் : அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டை கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த காற்று மழை காரணமாக வீட்டின் அருகே இருந்த கல்யாண முருங்கை மரம் விழுந்ததில் ஓட்டு வீடு முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் அருகில் இருந்த மின் கம்பியில் விழுந்ததில் மின் கம்பம் முறிந்தது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த மோகன்தாஸ் மற்றும் அவரது மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருவிடை மருதூரை சேர்ந்தவர் மோகன்தாஸ் தற்போது தாதம்பேட்டை கிராமத்தில் ரமேஷ் என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். அவருடன் ஊனமுற்ற மகள் கவுரி உடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக பலத்த காற்று வீசியது பின்னர் பரவலாக மழை பெய்தது. பலத்த காற்றின் காரணமாக வீட்டின் அருகில் இருந்த மரம் சாய்ந்தது. இதில் வீட்டின் மேல் விழுந்ததில் ஓட்டு வீடு முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் அருகில் இருந்த மின் கம்பியில் சாய்ந்ததால் மின் கம்பம் முறிந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல் மின் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார்.இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக வீட்டில் தூங்கிய இருவரும் உயிர் தப்பினர். பின்னர் மரம் அகற்றப்பட்டு மின்கம்பங்கள் சீரமைக்கும் பணி நடைபெற்றது.

The post அரியலூரில் பலத்த காற்றுடன் மழை-மரம் முறிந்ததில் ஓட்டுவீடு, மின்கம்பம் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: