எம்.ஜி.ஆர் திரைப்படம் – தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: எம்.ஜி.ஆர். திரைப்படம் – தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் 2025-26ம் ஆண்டிற்கான இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பிற்கு இம்மாதம் 28ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: சென்னை தரமணியில் இயங்கிவரும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் 2025-2026 கல்வியாண்டில் இளங்கலை காட்சிக்கலை எனும் நான்காண்டு கால பட்டப்படிப்பிற்கான கீழ்க்கண்ட பிரிவுகளில் மாணவர் சேர்கைக்கு இணையத்தளம் வழியாக விண்ணப்பங்கள் கடந்த மாதம் 28ம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன.

அதன்படி, ஒளிப்பதிவு, டிஜிட்டல் இண்டர்மிடியேட், ஆடியோகிராபி, இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு, அனிமேஷன் மற்றும் விஷூவல் எபேக்ட் உள்ளிட்ட இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 28ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மாணவ – மாணவியர் விருப்பமுள்ள பாடப்பிரிவுகளுக்கு www.filminstitute.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து 28ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post எம்.ஜி.ஆர் திரைப்படம் – தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: