அண்ணாமலை என்ற வேதாளம் செல்வப்பெருந்தகை மீது ஏறியுள்ளது: ஜெயக்குமார் சீண்டல்

சென்னை: அண்ணாமலை என்ற வேதாளம் தற்போது எங்களை விட்டுவிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது போய் ஏறியுள்ளது என்று ஜெயக்குமார் கூறினார். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் சிலைக்கு நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் சென்றனர்.

அப்போது, ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவை 90 சதவீதம் இணைத்துவிட்டதாக சசிகலா கூறுவது சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பது போன்றது. கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன். அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைப்பூச்சிதான் ஓ.பன்னீர்செல்வம். மீண்டும் ஓபிஎஸ்சை கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை.
அண்ணாமலை என்ற வேதாளம் தற்போது எங்களை விட்டுவிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது போய் ஏறியுள்ளது.

நான் லுங்கிக் கட்டிக்கொண்டு பேட்டி அளிப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். லுங்கி கட்டுபவர்களை அவமதிப்பது போல அவர் பேசி உள்ளார். இஸ்லாமியர்களில் பெரும்பாலானவர்கள் லுங்கிதான் கட்டுகிறார்கள். தமிழகத்தில் வீட்டில் இருக்கும்போது பலர் லுங்கியுடன்தான் இருப்பார்கள். எனவே லுங்கி கட்டுவது அவமரியாதை போல அண்ணாமலை புதிய கண்டுபிடிப்பை கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

The post அண்ணாமலை என்ற வேதாளம் செல்வப்பெருந்தகை மீது ஏறியுள்ளது: ஜெயக்குமார் சீண்டல் appeared first on Dinakaran.

Related Stories: