அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில் தமிழகத்தில் ரூ.381 கோடியில் 18 ரயில் நிலையங்கள் சீரமைப்பு: பிரதமர் மோடி நாளை அடிக்கல்

சென்னை: அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில் தமிழகத்தில் 18 ரயில் நிலையங்கள் ரூ.381 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. மொத்தம் ரூ.24,470 கோடியில் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் செயல்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம்’ என்ற புதிய திட்டத்தின் கீழ், மொத்தம் 1309 ரயில் நிலையங்களை மேம்படுத்த உள்ளது. 508 ரயில் நிலையங்களை ரூ.24,470 கோடியில் மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி நாளை (6ம் தேதி) அடிக்கல் நாட்டுகிறார்.

லிப்ட், நடைமேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணியர் காத்திருப்பு அறைகள், நுழைவாயில்கள் சீரமைப்பு, எஸ்கலேட்டர்கள், மல்டி லெவல் பார்க்கிங், சிசிடிவி கேமரா உள்ளிட்ட வசதிகள் இதில் இடம் பெறும்.
தமிழகத்தில் மட்டும் முதல்கட்டமாக, செங்கல்பட்டு, பெரம்பூர், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திருப்பூர், போத்தனூர், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகர்கோவில் ஆகிய 18 ரயில் நிலையங்கள் ரூ.381 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது. அம்ரித் பாரத் ரயில் நிலை மேம்பாட்டு திட்டப் பணிகள் துவங்கப்பட்டு, வரும் 2024 பிப்ரவரிக்குள் மொத்த பணிகளையும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

The post அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில் தமிழகத்தில் ரூ.381 கோடியில் 18 ரயில் நிலையங்கள் சீரமைப்பு: பிரதமர் மோடி நாளை அடிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: