அமெரிக்க ஏஎம்டி நிறுவனம் சார்பில் ரூ.3,300 கோடியில் ஆராய்ச்சி மையம்: பெங்களூருவில் அமைகிறது

பெங்களூரு: அமெரிக்காவில் சிப் தயாரிக்கும் பெரிய நிறுவனமான ஏஎம்டி நிறுவனம் பெங்ளூருவில் நாட்டின் மிக பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ரூ.3,300 கோடி முதலீட்டில் அமைகிறது. நாட்டில் ஆராய்ச்சி மையங்கள் அமைப்பதற்கு பெங்களூரு ஏற்ற இடமாக இருப்பதால், அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் தொழில் முதலீடு செய்து வருகிறது. குஜராத் மாநிலம், காந்திநகரில் நடந்து வரும் செமிகண்டக்டர் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அமெரிக்காவில் சிப் தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஏஎம்டி நிறுவன அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கருத்தரங்கில் பங்கேற்று பேசிய ஏஎம்டி நிறுவன இயக்குனர், ‘‘இந்தியாவில் ரூ.3,300 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தொடங்க முடிவு செய்துள்ளோம். இது இந்தியாவில் மிக பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாக இருக்கும். இந்த மையம் பெங்களூருவில் அமைக்கப்படுகிறது. இவ்வாண்டு இறுதிக்குள் இதற்கான பணி தொடங்கப்படும். பெங்களூருவில் அமையும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் செமி கன்டக்டர் உள்பட பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் பரிசோதனை கூடம், நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் அமைக்கப்படும்’’ என்று தெரிவித்தனர்.இந்த ஆராய்ச்சி மையம் மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் 3 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் ஏஎம்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post அமெரிக்க ஏஎம்டி நிறுவனம் சார்பில் ரூ.3,300 கோடியில் ஆராய்ச்சி மையம்: பெங்களூருவில் அமைகிறது appeared first on Dinakaran.

Related Stories: