அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி விசிக ஆலோசனை கூட்டம்: செய்யூர் எம்எல்ஏ பாபு பங்கேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாலை செங்கல்பட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலாளர் செங்கை தமிழரசன் தலைமை தாங்கினார். செய்தி தொடர்பாளர் அன்புசெல்வன் முன்னிலை வகித்தார். இதில், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு பங்கேற்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

இதில், வரும் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளன்று செங்கல்பட்டு மாவட்ட விசிக சார்பில், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே அம்பேத்கர் சிலை வரை பிரமாண்ட அணி வகுப்பு பேரணி நடத்த வேண்டும். பின்னர், அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட செயலாளர்கள் ராஜ்குமார், சூ.கா.ஆதவன், தேவ அருள்பிரகாசம், சட்டமன்ற தொகுதி செயலாளர் தென்னவன், செங்கல்பட்டு நகர செயலாளர் ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி விசிக ஆலோசனை கூட்டம்: செய்யூர் எம்எல்ஏ பாபு பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: