மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவியேற்றுள்ள அஜித் பவாருக்கு நிதித்துறை ஒதுக்கீடு

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவியேற்றுள்ள அஜித் பவாருக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசியல் அரசியலில் புதிய திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. சமீபத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பாஜக கூட்டணியில் இணைந்தது தான் மகாராஷ்டிராவில் அடுத்தடுத்த திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. பாஜக கூட்டணியில் இணைந்த அஜித்பவார் துணை முதலைவராகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், மகாராஷ்டிரா அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சமீபத்தில் துணை முதலமைச்சரான அஜித் பவாருக்கு முக்கிய துறையான நிதித்துறை மற்றும் திட்ட வளர்ச்சித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அஜித் பவார் என்சிபி அணிக்கு எந்த துறைகளை ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பாக கடந்த சில வாரங்களாக தீவிர ஆலோசனைகள் நடைபெற்றன. தற்போது, மகாராஷ்டிரா அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா கேபினட் அமைச்சர் சகன் புஜ்பால் உணவு மற்றும் சிவில் சப்ளை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் அனில் பாட்டீலுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு, பேரிடர் மேலாண்மை துறை, அமைச்சர் அதிதி சுனில் தட்கரே – பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, அமைச்சர் தனஞ்சய் முண்டேவுக்கு விவசாயம், அமைச்சர்திலீப் வால்ஸ் பாட்டீலுக்கு வருவாய், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள மேம்பாடு ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவியேற்றுள்ள அஜித் பவாருக்கு நிதித்துறை ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: