ரத்தக்கொடைக்கு ‘ஆப்’கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மதுரை: கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒன்றிய அரசிடம் நேரடியாக நிதி பங்களிப்பு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள பயோ காஸ் அமைப்பை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்பு அவர் அளித்த பேட்டி: மதுரை எய்ம்சுக்கு ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு ஏதும் இல்லை. அப்போதைய ஆட்சியாளர்கள் (அதிமுக) ஒன்றிய அரசிடம் நிதி பங்களிப்பு கேட்டிருந்தால், இந்நேரம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு இருக்கும். கடந்த ஆட்சியாளர்கள் அடிக்கல் நாட்டுவது, நிகழ்ச்சி என்ற அளவிலேயே அலட்சியமாக இருந்து விட்டனர்.

தற்போது மதுரை எய்ம்ஸ் பணிகள் உடனே துவங்கிட வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தொடர்ந்து அரசால் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜிகா துணைத்தலைவரை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் டெண்டர் பணிகள் 2024க்குள் முடிந்து மருத்துவமனை கட்டுமானம் 4 ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு 2028க்குள் எய்ம்ஸ் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. இந்தாண்டும் எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒன்றிய அரசிடம் நேரடியாக நிதி பங்களிப்பு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஆளுநர் தடுக்கிறார். அவரை தான் மக்கள் எதிரியாக பார்க்கின்றனர்.

நாட்டிலேயே அதிகளவு ரத்தக்கொடை வழங்குவதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. இதில் கடந்த 10 ஆண்டுகளில் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது. ரத்தக்கொடை வழங்குவதில் மீண்டும் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்வதற்குரிய நடவடிக்கை அரசு எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் உள்பட பல்வேறு இடங்களில் புதிதாக ரத்த வங்கிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. நோயாளிகளின் அவசர ரத்த தேவைக்கு என்று பிரத்யேகமாக ரத்தக்கொடையாளர் ஆப் என்ற புதிய கைப்பேசி செயலி அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரத்தம் தேவைப்படும் நோயாளிகளின் உயிர் காக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

The post ரத்தக்கொடைக்கு ‘ஆப்’கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: