அக்னிபாத் திட்டம் பற்றி நாட்டை தவறாக வழிநடத்துகிறார்: ராகுல் மீது அமைச்சர் ராஜ்நாத்சிங் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஒன்றிய பட்ஜெட் குறித்து மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசினார். அதன் பிறகு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ஒன்றிய பட்ஜெட் பற்றி தவறான கருத்துகளை பரப்ப ராகுல்காந்தி முயற்சிக்கிறார். விவாதத்தின் போது, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கு விளக்கம் அளிப்பார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் அக்னிபாத் திட்டம் தொடர்பாக ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துகிறார். ராணுவ ஜவான்கள் நாட்டின் எல்லைகளை பாதுகாக்கின்றனர். இது தேசிய பாதுகாப்பின் முக்கியமான பிரச்னை.

அக்னிபாத் பிரச்னையில் நாட்டை தவறாக வழிநடத்துவதற்கு அவர் முயல்கிறார். சபாநாயகர் அனுமதியுடன் எப்போது வேண்டுமானாலும் இது குறித்து அறிக்கை வெளியிட தயாராக உள்ளேன்’’ என்றார். அக்னிவீரர் இறந்து விட்டால் அவரது குடும்பத்தினருக்கு ₹1 கோடி வழங்கப்படும் என அவையில் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். அது இன்சூரன்ஸ் தொகையாகும் இழப்பீடு அல்ல என்று ராகுல் காந்தி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அக்னிபாத் திட்டம் பற்றி நாட்டை தவறாக வழிநடத்துகிறார்: ராகுல் மீது அமைச்சர் ராஜ்நாத்சிங் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: