ஷார்ஜா: ஆப்கானிஸ்தான் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், தென் ஆப்ரிக்கா 33.3 ஓவரில் 106 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ஷார்ஜா கிரிக்கெட் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா 10 ஓவரில் 36 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறியது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜேசன் ஸ்மித், பெலுக்வாயோ டக் அவுட்டாகினர். இந்த நிலையில், வியான் முல்டர் – ஜார்ன் ஃபார்டுய்ன் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 39 ரன் சேர்த்தது. ஃபார்டுய்ன் 16 ரன்னில் வெளியேற… கடுமையாகப் போராடிய வியான் முல்டர் அரை சதம் அடித்து அசத்தினார். முல்டர் 52 ரன் (84 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஃபரூக்கி பந்துவீச்சில் கிளீன் போல்டாக, ரஷித் கான் சுழலில் லுங்கி என்ஜிடி டக் அவுட்டானார். தென் ஆப்ரிக்கா 33.3 ஓவரில் 106 ரன் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. பர்கர் 1 ரன்னுடன் (18 பந்து) ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் ஃபஸல்லாக் ஃபரூக்கி 7 ஓவரில் 1 மெய்டன் உள்பட 35 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். கஸன்பார் 3, ரஷித் கான் 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது.
The post ஆப்கானிஸ்தானுடன் முதல் ஒருநாள் 106 ரன்னில் சுருண்டது தென் ஆப்ரிக்கா: ஃபரூக்கி அபார பந்துவீச்சு appeared first on Dinakaran.