×

கேப்டனுடன் சண்டை போட்ட வெஸ்ட் இண்டீஸ் பவுலருக்கு 2 போட்டிகளில் தடை

பிரிட்ஜ்டவுன்: இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் சாய் ஹோப்புடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சக வீரரும் பந்து வீச்சாளருமான அல்சாரி ஜோசப், அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரீபியன் கடல் பகுதியில் உள்ள பார்படாசில் கடந்த புதன் கிழமை நடந்த ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசுடன், இங்கிலாந்து அணி மோதியது. தொடரின் மூன்றாவது மற்றும் கடைசியாக அமைந்த அந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை வென்றது.

அந்த போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் செய்தபோது வீரர்களை தக்க இடம் பார்த்து நிறுத்துவது தொடர்பாக, வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் சாய் ஹோப்புடன் அந்த அணி பந்து வீச்சாளர் அல்சாரி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த போட்டி சிறிது நேரம் தடைபட்டது. இந்நிலையில், அல்சாரி அடுத்த இரு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

The post கேப்டனுடன் சண்டை போட்ட வெஸ்ட் இண்டீஸ் பவுலருக்கு 2 போட்டிகளில் தடை appeared first on Dinakaran.

Tags : West Indies ,Bridgetown ,Alsari Joseph ,Chai Hope ,England ,Caribbean ,Dinakaran ,
× RELATED வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் நிதான ஆட்டம்