×
Saravana Stores

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

டர்பன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 61 வித்தியாசத்தில் ரன்கள் இந்திய அணி வெற்றி பெற்றது. டர்பனில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களை எடுத்தது. 203 என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 17.5 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி டர்பனில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சாம்சன் 107 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜெரால்ட் கோட்சி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 17.5 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக கிளாசன் 25 ரன்களும், கோட்சி 23 ரன்களும், ரிக்கல்டன் 21 ரன்களும் எடுத்தனர்.

The post தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : First T20 match ,South Africa ,India ,Durban ,T20 ,Dinakaran ,
× RELATED தென் ஆப்ரிக்கா போராடி வெற்றி