×

இந்தியாவுக்கு சோதனை மேல் சோதனை; 6 விக். வித்தியாசத்தில் ஆஸி ஏ அணி அபார வெற்றி

மெல்போர்ன்: இந்தியா ஏ – ஆஸி ஏ அணிகள் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், முதல் போட்டியில் ஆஸி வென்றது. இரண்டாவது டெஸ்ட் மெல்போர்ன் நகரில் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் அலட்சியமாக ஆடி 161 ரன் மட்டுமே எடுத்தது. பின் ஆடிய ஆஸி, 223 ரன் எடுத்து, 62 ரன் முன்னிலை பெற்றது. இரண்டாம் இன்னிங்சில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 229 ரன் எடுத்தது. இதனால், ஆஸி அணி வெற்றி பெற 168 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின், 2வது இன்னிங்சை ஆடிய ஆஸி வீரர்கள் வெற்றி இலக்கை நோக்கி நிதானமாக ஆடினர். இறுதியில், ஆஸி அணி 4 விக் இழப்புக்கு 169 ரன் குவித்தது. இதன் மூலம், 6 விக். வித்தியாசத்தில் ஆஸி அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரையும் கைப்பற்றியது.

The post இந்தியாவுக்கு சோதனை மேல் சோதனை; 6 விக். வித்தியாசத்தில் ஆஸி ஏ அணி அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : India ,Aussie A ,Melbourne ,Aussies ,India A ,Aussie A. ,Vic ,Dinakaran ,
× RELATED இந்தியா ஏ அணி மீண்டும் சொதப்பல்: முதல் இன்னிங்சில் ஆஸி. 62 ரன் முன்னிலை