இவ்விவகாரத்தில் டிரம்ப்புக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றவியல் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தப் பணப் பரிமாற்றத்தை மறைப்பதற்காக தனது நிறுவனக் கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், வழக்கின் பல கட்ட விசாரணைக்கு பின், டிரம்ப்புக்கு எதிராக 34 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக இருந்த ஒருவர் மீது குற்றவியல் வழக்கில் தண்டனை பெறுவது வரலாற்றில் இதுவே முதல்முறை.
இதையடுத்து, இந்த வழக்கில் தண்டனை விபரங்கள் ஜூலை 11ம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணையின் போது வழங்கப்படும் என்று நியூயார்க் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டிரம்புக்கு சிறை தண்டனை விதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஜூலை 15ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஜூலை 11ம் தேதி டிரம்ப் மீதான தண்டனை வெளியாக உள்ளதால், அமெரிக்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் மாஜி அதிபர் டிரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகள் நிரூபணம்: ஜூலை 11ம் தேதி தண்டனை அறிவிப்பு appeared first on Dinakaran.