டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்க நினைத்தால் கிங் கோஹ்லிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கலாம்: மாஜி தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் சொல்கிறார்

மும்பை: இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை தேர்வுக் குழு நியமிக்க நினைத்தால், விராட் கோஹ்லிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கலாம் என்று தேர்வுக் குழு முன்னாள் தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறி உள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியில் இருந்து திடீரென தல டோனி விலகியபோது, உடனடியாக கேப்டனாக நியமிக்கப்பட்டு இந்திய டெஸ்ட் அணியை கட்டமைத்தவர் விராட் கோஹ்லி. இவரது தலைமையின் கீழ் இந்திய அணி வெளிநாடுகளிலும் கோப்பைகளை வெல்ல தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து என்று வெளிநாடுகளிலும் விராட் கோஹ்லி கேப்டன்சியில் அசத்தினார்.

68 போட்டிகளில் 40 வெற்றி, 11 டிரா என்று வெற்றிகரமான டெஸ்ட் அணி கேப்டனாக கோஹ்லி வலம் வந்தார். இந்நிலையில் கடந்த தென்ஆப்பிரிக்க தொடருக்கு பின் திடீரென டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விராட் கோஹ்லி விலகினார். இதன் காரணமாக பிசிசிஐ வேறு வழியின்றி ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்தது. ஆனால் ரோகித் சர்மா டெஸ்ட் கேப்டன்சியில் பெரியளவில் சோபிக்கவில்லை. காயத்தால் அவதிப்பட்ட அவருக்கு அது பெரும் சோதனையாக அமைந்தது. இதன் காரணமாக பிசிசிஐ தரப்பில் புதிய கேப்டனை நியமிக்க ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தாங்கி வரும் சூழலில், ஒருநாள் போட்டிகளுக்கான அணிக்கும் உலகக்கோப்பைக்கு பின் ஹர்திக் பாண்டியா தலைமையேற்க வாய்ப்புள்ளது. ஆனால் டெஸ்ட் போட்டிகளுக்கு யாரை கேப்டனாக நியமிப்பது என்று தெரியாமல் பிசிசிஐ திணறி வருகிறது. ஏனெனில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல் உள்ளிட்டோர் காயமடைந்துள்ளனர். இதனால் வேறு வழியில்லாமல் துணைக் கேப்டனாக அஜிங்கியா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியதாவது:- இந்திய அணியின் தேர்வுக் குழுவினர் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ரோகித் சர்மா கேப்டன்சியில் இருந்து விலகினால் விராட் கோஹ்லியை நியமிக்கலாம். ரஹானே தலை மேல் தொங்கும் கத்தி.. வெஸ்ட் இண்டீஸ் தொடரே கடைசி வாய்ப்பு.. துணைக் கேப்டனுக்கு வந்த சோதனை! ஒருவேளை டெஸ்ட் கேப்டன்சியை மாற்ற தேர்வுக் குழுவினர் எண்ணினால், விராட் கோஹ்லியால் இந்திய அணியை சிறப்பாகவே தலைமை தாங்க முடியும். ஆனால் மீண்டும் கேப்டன்சி பொறுப்பை ஏற்பது தொடர்பாக விராட் கோஹ்லி என்ன நினைக்கிறார் என்பது தெரியவில்லை. ஒருவேளை புதிய கேப்டனை தேர்வுக் குழு நியமிக்க நினைத்தால், நிச்சயம் விராட் கோஹ்லி அந்த பொறுப்பை ஏற்கலாம் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

The post டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்க நினைத்தால் கிங் கோஹ்லிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கலாம்: மாஜி தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் சொல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: