எல்லையில் அத்துமீறிய பாக்.நபர் சுட்டுகொலை

A Pakistani person crossed border shot dead

பூஞ்ச்: இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் நபரை ராணுவம் சுட்டு கொன்றது. இதுகுறித்து இந்திய ராணுவத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி லெப்.கர்னல் தேவேந்தர் ஆனந்த் கூறுகையில்,‘‘காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம், எல்லை கட்டுப்பாட்டு அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 2.15 மணிக்கு மர்ம நபர்களின் நடமாட்டம் காணப்பட்டது.

எல்லை பகுதி வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிசூடு நடத்தினர். துப்பாக்கிசூட்டுக்கு பின்னர் எல்லையில் பாகிஸ்தானியர் ஒருவரின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தப்பி சென்ற மேலும் 2 பேரை பிடிக்க ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது’’ என்றார்.

The post எல்லையில் அத்துமீறிய பாக்.நபர் சுட்டுகொலை appeared first on Dinakaran.

Related Stories: