தண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்க கூட்டம்

தண்டராம்பட்டு, டிச.3: தண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை பேரவை கூட்டம் நடந்தது.தண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்தில் வட்டக்கிளை துணைத் தலைவர் வெங்கடேசன் தலைமையில், நேற்று முன்தினம் மாலை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வட்டக்கிளை பேரவை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாணிக்கவாசகம் வரவேற்றார். இதில் மாவட்ட துணைத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

அப்போது புதிய விவசாய கொள்கை, கல்வி கொள்கைகளை கைவிட வேண்டும். மாநில அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், உட்புற நூலகர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்ட மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.இதில் வட்டக்கிளை இணைச்செயலாளர் பவுன்குமார், வட்ட கிளை செயலாளர் வெங்கடாசலம், சத்துணவு ஊழியர் சங்கம் வட்டகிளை இணை செயலாளர் லட்சுமி, வட்ட கிளை இணை செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: