அடிப்படை வசதிகள் கோரி குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம் ராஜபாளையத்தில் பரபரப்பு

ராஜபாளையம், டிச. 2:  அடிப்படை வசதிகள் கோரி ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரம் பகுதியில் குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும், மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்தும், அடிப்படை வசதிகளை உடனே செய்து தர கோரியும் நேற்று இப்பகுதி மக்கள் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர்பின்னர் தளவாய்புரம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி சில நாட்களில் அடிப்படை வசதிகள் செய்து தர உறுதியளித்தார். அதன்பிறகே பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Related Stories: