கலெக்டர் நேரில் ஆய்வு பெரம்பலூர் மாவட்டத்தில் காணாமல் போனதாக புகார் கூறிய நபர்களை அடையாளம் காட்டும் நிகழ்ச்சி

பெரம்பலூர், நவ. 23: பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் போனதாக புகாரில் கூறப்பட்ட நபர்களை அடையாளம் காட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட சடலங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், பாடாலூர், குன்னம், மங்கலமேடு, அரும்பாவூர், மருவத்தூர், வி.களத்தூர், கை.களத்தூ ர் ஆகிய 8 காவல் நிலைய ங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டுவரை காணாமல் போனவர்கள் தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், புகார்தாரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அடையாளம் தெரியாத நிலையில் இறந்தவர்களின் 300க்கும் மேற்பட்ட உடல்கள் பவர் பாயிண்ட் பிரசண்டேஷன் முறையில் கணினி திரையில் காட்சிப்படுத்தப்பட்டு அடையாளம் கண்டறியும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சியினை பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் தொடங்கி வை த்தார். ஏடிஎஸ்பிகள் கார்த்திகேயன், நிதிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டிஎஸ்பிக்கள் (பெரம்ப லூர்) பாலமுருகன் (மங்க லமேடு)மோகன்தாஸ், (நில மோசடி தடுப்பு பிரிவு) ரவிச்சந்திரன், (ஆயுதப்படை) சுப்பராமன், இன்ஸ்பெக்டர் கள் (மங்கலமேடு) கலா, (அனைத்து மகளிர் காவல் நிலையம்) ஜெயசித்ரா, (குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு) கார்த்திகாயினி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பெரம்பலூர் மாவட்ட காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதி களில் காணாமல் போனவர்கள் குறித்து புகார் கொடுத்த நபர்கள் மற்றும் உறவினர்கள் 25பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளில், நீர் நிலைகளில், பொது இடங்களில் அடையாளம் தெரியாதபடி இறந்து கிடந்த நபர்களின் சடலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கண்டறியப்பட்ட அடையாளம் தெரியாத நப ர்களின் சடலங்கள் என 300க்கும் மேற்பட்ட சடலங்கள் கணினி திரைமூலம் காட்சிப்படுத்தப்பட்டன.

Related Stories: