தொட்டபெட்டாவில் பனிப்பொழிவு அதிகரிப்பு தேயிலை பூங்காவில் நிழற்வலை கொண்டு மலர் செடிகள், நாற்றுகளுக்கு பாதுகாப்பு

ஊட்டி, நவ. 22: நீலகிரி மாவட்டதில் பனி பொழிவு அதிகரித்துள்ள நிலையில், நிழற்வலைக் கொண்டு மலர் செடிகள் மற்றும் குப்ரஸ் மரக்கன்றுகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.  தொட்டபெட்டா அருகேயுள்ள தேயிலை பூங்காவில் தற்போது கோடை சீசனுக்காக மலர் செடிகள், அலங்கார செடிகள் கொண்டு தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக மலர் நாற்றுக்கள் உற்பத்தி ெசய்யப்பட்டு வருகின்றன. அதேபோல், விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக குப்ரஸ் மரக்கன்றுகள் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்பகுதியில் தற்போது உறைபனி விழத்துவங்கியுள்ளது. இதனால், மலர் நாற்றுக்கள் மற்றும் இதர மரக்கன்றுகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த நாற்றுக்கள் பனியில் பாதிக்காமல் இருக்க தற்போது பிளாஸ்டிக் நிழற்வலைகள் அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. ேமலும், நாற்றுகள் வெயிலில் வாடாமல் இருக்க நாள் தோறும் தண்ணீர் பாய்ச்சும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: