பெரணமல்லூரில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்ட பயிற்சி

பெரணமல்லூர், நவ.11: பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நேற்று கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் குறித்து குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன்பாபு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சவிதா முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் வரவேற்றார். ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன் தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட அளவிலான பயிற்சியாளர்கள் செல்வம் மற்றும் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதிகள், வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் ஊராட்சி செயலர் உள்ளிட்டோருக்கு கிராம ஊராட்சி வளர்ச்சி குறித்த பயிற்சி அளிக்க உள்ளனர். தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகளில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் குறித்த 2 நாள் பயிற்சி முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் முதற்கட்டமாக அகரம்பள்ளிப்பட்டு, அல்லப்பனுர், ஆத்திப்பாடி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், சுய உதவிக்குழு, ஆதிதிராவிட பிரதிநிதி, தன்னார்வலர்கள், இளைஞர் உறுப்பினர்கள் ஆகியோருக்கு கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிடிஓ சம்பத், துணை பிடிஓ அண்ணாமலை தலைமையில் பயிற்றுனர் சண்முகம் பயிற்சி அளித்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், மணி, குப்பாயி ஆறுமுகம் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories: