வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை தீபாவளி பண்டிகைக்காக உரிமம் இன்றி பலகாரங்கள் தயாரித்தால் நடவடிக்கை

திருவாரூர், நவ.9: தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து உணவு நிர்வாக பாதுகாப்பு பிரிவின் சார்பில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ்குமார் விடுத்துள்ள அறிக்கை: பண்டிகை கால இனிப்பு பொருட்கள் தயாரிப்பு இடத்தை பொருத்தவரை உரிமம் இல்லாமல் பண்டிகைக்கால இனிப்புகள் தயார் செய்யக் கூடாது. திறந்தவெளிகளில் உணவு பொருள்கள் தயார் செய்யக் கூடாது. சுத்திகரி க்கப்பட்ட குடிநீர் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

இனிப்பு மற்றும் காரம் தயார் செய்ய பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் கடலை மாவு, மைதா, சக்கரை, நெய், டால்டா, எண்ணெய் போன்றவை தரமான பொருட்கள் வாங்கி பயன்படுத்தப்பட வேண்டும். அடைக்கப் பட்ட எண்ணெய்களை மட்டும் வாங்கி பயன்படுத்தப்பட வேண்டும்.

வெளி உபயோகத்திற்கு மட்டும், நான் எடிபுல், தீபத்திற்கு பயன்படுத்துவது போன்ற வாசகமுள்ள எண்ணெய் பாக்கெட்டுகளை வாங்கி உணவு பொருள் தயாரிப்பிற்கு பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது. சமையலறை போதுமான வெளிச்சத்துடனும், போதுமான அளவு புகை வெளி யேற்றும் சக்தியுடன் புகைபோக்கி இருக்க வேண்டும். தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் அதற்குரிய வெப்ப நிலையில் சேமித்து வைக்க வேண்டும். பணியாளர்கள் சோப்பு திரவத்தினால் கைகளை கழுவிய பின்தான் பணியில் ஈடுபட வேண்டும். முகக்கவசம், தொப்பி அணிந்து பணியில் ஈடுபட வேண்டும். பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் மற்றும் உபகரணங்கள் புஞ்சை தொற்று ஏற்படதவாறு காய வைக்க வேண்டும்.

விற்பனை இடத்தை பொறுத்த வரையில் சில்லறை முறையில் ட்ரேயில் வைத்து விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகள் அனைத்திற்கும் ஒவ் வொரு ட்ரெயிலும் தனித்தனியாக தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதி பொதுமக்கள் பார்வையில் படும்படி கட்டாயம் வைக்க வேண்டும். செய்தி தாள்கள் பயன்படுத்தி உணவு பொருட்கள் மூடுதல், பொட்டலமிடுதல் கூடாது. தடை செய்யப்பட்ட பாலிதீன் பயன்படுத்தினால் உடனடி அபராதம் விதிக்கப்படும்.

பொது மக்கள் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற்ற கடைகளில் மட்டும் உணவு பொருட்கள் வாங்கவும். செயற்கை வண்ணம் கலந்த பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. உணவு பொருட்களில் புகார் ஏதும் இருப்பின் 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: