செய்யாறு அடுத்த புதுப்பாளையம் அகத்தீஸ்வரர் கோயிலில் ₹27 லட்சத்தில் தேர் திருப்பணி

செய்யாறு, நவ.9: செய்யாறு அடுத்த புதுப்பாளையம் அகத்தீஸ்வர் கோயிலில் தேர் திருப்பணிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா, புதுப்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ₹27 லட்சம் மதிப்பில் புதிதாக தேர் திருப்பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், எம்எல்ஏ தூசி கே.மோகன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். வரும் தை மாதம் 1ம் தேதி தேரோட்டம் நடத்தும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார். ஆய்வின்போது, கோயில் ஆய்வாளர் சம்பத் உட்பட பலர் உடனிருந்தனர்.

சிறப்பு மருத்துவ முகாம்:

செய்யாறு அடுத்த மோரணம் கிராமத்தில் அரசின் சிறப்பு மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் வினோத்குமார் தலைமையில் நடந்தது. வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜூ, ஊராட்சி தலைவர் திலகா கார்த்திக், துணைத்தலைவர் அகிலா ரவி முன்னிலை வகித்தனர். டாக்டர் என்.ஈஸ்வரி வரவேற்றார். முகாமை, எம்எல்ஏ தூசி கே.மோகன் தொடங்கி வைத்தார்.

இதில் 1,324 நபர்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, செய்யாறில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமிற்கு வந்திருந்த 1,500க்கும் மேற்பட்டவர்களுக்கு எம்எல்ஏ மதிய உணவு வழங்கினார். அதிமுக நகர செயலாளர் ஏ.ஜனார்த்தனன், பேரவை செயலாளர் கே.வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் எம்.மகேந்திரன், எம்.அரங்கநாதன், சி.துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: