ஏரலில் தடையை மீறி காங்கிரசார் உண்ணாவிரதம் நிர்வாகிகள் உள்பட 35 பேர் கைது

ஏரல், நவ. 1: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஏரலில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.  மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் ஆலோசனையின் படி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. முறைப்படி விண்ணப்பித்தும் கொரோனா ஊரடங்கால் போலீசார் இதற்கு அனுமதி மறுத்தனர். இருப்பினும் ஏரலில் தடையை மீறி நடத்தப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தெற்கு மாவட்டத் தலைவர் ராமன் தலைமை வகித்தார். ஓபிசி மாநில துணைத்தலைவர் காமராஜ், மாவட்ட தலைவர் தாசன் முன்னிலை வகித்தனர்.

 இதில் வட்டாரத் தலைவர்கள் சற்குரு, கோதண்டராமன், புங்கன், நகரத் தலைவர்கள் பாலசிங், சித்திரை, விவசாய அணி மாவட்ட துணைத்தலைவர் ராஜவேல், மாவட்ட துணைத்தலைவர் விஜயராஜா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சந்திரபோஸ், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயசீலன் துரை, துணைத்தலைவர் இசை சங்கர், வட்டாரச் செயலாளர் முத்துகுமார், குமரேசன், முத்துகுமார், ராமையா, ரிவிங்டன் வாசு, பிச்சையா, வக்கீல் சித்தார்த்தன், நல்லமுத்து, அய்யம்பெருமாள், சந்தனகுமார், ராமமூர்த்தி, உள்ளிட்ட நிர்வாகிகள் என 35 பேர் பங்கேற்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேரையும் கைதுசெய்த ஏரல் போலீசார் பின்னர் மாலை விடுவித்தனர்.

Related Stories: