காரைக்கால் கோட்டுச்சேரியில் சீதளாதேவி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால், அக்.30: காரைக்கால் கோட்டுச்சேரியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சீதளாதேவி மாரியம்மன் கோயிலில், 32 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

காரைக்கால் கோட்டுச்சேரியில் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் செய்து 32 ஆண்டுகளுக்கு ஆனதால், மீண்டும் மகா கும்பாபிஷேகம் செய்ய கோயில் நிர்வாகம் முன்வந்தது. அதன்படி கடந்த ஆண்டு திருப்பணி வேலைகள் தொடங்கியது. கொரோனா தொற்றுக்கு முன், திருப்பணி வேலைகள் முடிந்தாலும், அரசின் அனுமதிக்காக கும்பாபிஷேகம் தள்ளிபோனது. இந்நிலையில், அக்டோபர் 29ம் தேதி மகா கும்பாபிஷேகத்திற்கு தேதி குறிப்பிடப்பட்டது.

தொடர்ந்து, கடந்த 26ம் தேதி அன்று முதல் யாகச்சாலை பூஜைகள் தொடங்கியது. பின்னர், மற்ற யாகச்சாலை பூஜைகள் நடைபெற்று, நேற்று காலை 6ம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து, பூர்ணாஹூதி நடைபெற்றது. பின்னர், கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில், புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ சந்திரபிரியங்கா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: