நெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க.வினர் முடிவு

பந்தலூர்,அக்.23:பந்தலூரில் நெல்லியாளம் நகரம் திமுக நிர்வாகிகள்  ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. பந்தலூரில், நெல்லியாளம் நகரம் திமுக  அலுவலகத்தில் நகர நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நகர செயலாளர் காசிலிங்கம்  தலைமையில் நடைப்பெற்றது. கூடலூர் எம்எல்ஏ திராவிடமணி முன்னிலை  வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வரும்மாறு:  திமுகவின் முப்பெரும் விழா நிகழ்ச்சியை வரும் 8ம் தேதி பந்தலூரில் சிறப்பாக நடத்துவது.

நெல்லியாளம் நகராட்சியில் இருக்கும் 21  வார்டுகளில் உள்ள மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பது.

மாற்றுத்திறனாளி, மற்றும் மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவது  என தீர்மானிக்கப்பட்டது. மேலும் நெல்லியாளம் நகராட்சி நடக்கும் ஊழல்களை  கண்டித்து வரும் 28ம் தேதி நெல்லியாளம் நகராட்சி அலுவலகம் முன் கண்டன  ஆர்ப்பாட்டம் திமுக சார்பில் நடத்துவது. என தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்தில் நகர துணை  செயலாளர்கள் வக்கீல் சிவசுப்பிரமணியம், ஷீலா, பொருளாளர் தென்னரசு,அவை தலைவர்  ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி ராமச்சந்திரன், மாவட்ட விவசாய அணி  செயலாளர் ஆலன், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் சேகர், நகர இளைஞரணி  அமைப்பாளர் முரளிதரன்,எல்பிஎப் தலைவர் மாடசாமி,துணை அமைப்பாளர்கள்  மூர்த்தி, ஞானசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: