மார்பக புற்றுநோய் கண்டறிய மாதாந்திர பரிசோதனை அவசியம் அரசு டாக்டர் பேச்சு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

செய்யாறு, அக்.21: செய்யாறு அடுத்த நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு டாக்டர் என்.ஈஸ்வரி தலைமை தாங்கி பேசியதாவது: மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தோல் கடினமாக இருத்தல், தோல் அமுங்கிய நிலை, தோல் அரிப்பு, சிவந்த நிறம், ரத்தம் கலந்த கசிவு, மார்பகத்தில் கட்டி ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். அவ்வாறு அறிகுறி தென்படும் பெண்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

மேலும், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, அன்பான கவனிப்பு, சமூகத்தில் எக்காரணம் கொண்டும் ஒதுக்கப்படால் அவர்களுக்கு வேண்டிய பராமரிப்பு கிடைப்பதற்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த நாம் உறுதி அளிப்போம்.நாம் வசிக்கும் சமூகத்தில் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளை ஆரம்ப காலத்திலே கண்டறிய மாதாந்திர சுய மார்பகப் பரிசோதனை, செவிலியர் மற்றும் மருத்துவர்களிடம் பரிசோதித்து கொள்வது அவசியம். இவ்வாறு அவர் கூறினார். இதில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் கே.சம்பத் செய்திருந்தார்.

Related Stories: