ராணுவ பள்ளியில் ‘அட்மிஷன்’ அரசு பள்ளி மாணவர் அசத்தல்

திருப்பூர், அக்.18: நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர், நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று  ராணுவ பள்ளியில் சேர்ந்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் ராஷ்ட்டிரிய ராணுவ கல்லூரி செயல்படுகிறது. இப்பள்ளியில், சேர விரும்புவோர் தகுதித்தேர்வு, உடற்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். சில மாதங்களுக்கு முன் நடந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இவர்களில், திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் அஸ்வத்ராம் (12) வெற்றி பெற்றார். இவர், திருப்பூர், ஓடக்காடு பகுதியை சேர்ந்த இவரின் தந்தை செந்தில்குமார், பொங்கலுார் வட்டார கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றுகிறார். நுழைவு தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றதால், அஸ்வத்ராம் பிளஸ்-2 வரை நாட்டிலேயே தலைசிறந்த டேராடூன் ராணுவ பயிற்சி பள்ளியில் கல்வி பயில உள்ளார். மாணவர் அஸ்வத்ராமை பள்ளி தலைமையாசிரியர் பழனிசாமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related Stories: