மாவட்டத்தில் 148 பேருக்கு கொரோனா

நாமக்கல், அக்.16: நாமக்கல் மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.  நாமக்கல்  மாவட்டத்தில், கொரோனாவால் தினமும் 140 முதல் 150 பேர் பாதிக்கப்பட்டு  வருகிறார்கள். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவடிக்கையை  தீவிரப்படுத்தி வருகிறது. நேற்று அரசு பஸ் டிரைவர், மின்வாரிய ஆய்வாளர்,  அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.  மாவட்டத்தில் இதுவரை 7,714 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நேற்று 158 பேர் உள்பட இதுவரை 6,675 பேர் குணமடைந்துள்ளனர். 88 பேர்  உயிரிழந்துள்ளனர். 951 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று  வருகின்றனர். கொரோனா பரவாமல் தடுக்க, அனைவரும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. முககவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு, அபராதம் விதிக்கப்படுகிறது. நேற்று மாவட்டம் முழுவதும், முககவசம் அணியாமல் டூவீலர் மற்றும் கார்களில் வந்த 374 பேருக்கு தலா ₹200 அபராதமாக விதிக்கப்பட்டு, ₹74,800 வசூலிக்கப்பட்டது. மேலும், பொது இடங்களில் எச்சில் துப்பிய 6 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தலா ₹500 அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: