சாலையை அகலப்படுத்தியும் திருவில்லி.யில் போக்குவரத்திற்கு தடையாக உள்ள மின்கம்பங்கள்

திருவில்லிபுத்தூர், அக். 16:  திருவில்லிபுத்தூர் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை மிகவும் பரபரப்பானது. 24 மணி நேரமும் சிறிய அளவிலான வாகனங்கள் முதல் மிகப்பெரிய அளவிலான கண்டெய்னர் லாரிகள் உட்பட ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன.ஏராளமான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விபத்துக்களை குறைக்கவும் குறிப்பிட்ட இடங்களை தேர்வு செய்து சாலைகளை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. திருவில்லிபுத்தூர் -  ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை மடவார்வளாகம் அருகே செல்லும் பாதையில் கண்மாய் கரையை உயர்த்தி தடுப்புச்சுவர் கட்டி சாலையை அகலப்படுத்தப்பட்டது.

கடந்த சில மாதமாக நடந்து வந்த பணி தற்போது நிறைவடைந்துள்ளது. சாலையை சில அடிகள் வரை அகலப்படுத்தியதால் வாகனங்கள் தாராளமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், பல லட்ச ரூபாய் செலவு செய்தும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில்  சுமார் 6க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் தடையாக உள்ளது. இதனால் விபத்து ஏற்படுவழடன் விரிவாக்கப்பட்ட பகுதியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே, மின்கம்பங்களை உரிய முறையில் அகற்றி விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியை பயன்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: