தேவகோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற 3 நாள் கெடு

தேவகோட்டை, அக். 16:  தேவகோட்டை நகரில் ராம்நகர் முதல் ஆற்றுப்பாலம் ஒத்தக்கடை வரை ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் அதிகளவில் உள்ளது. பெரும்பாலான ஆக்கிரமிப்புகள் நிரந்தர கட்டிடங்களாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித பயனும் இல்லை. அப்படியே ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகமும், போலீசாரும் முயன்றாலும் நிரந்தர தீர்வு காண முடியாமல் இருந்து வந்தது. இந்நிலையில், தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் (பொ) அய்யனார் விடுத்துள்ள அறிக்கையில், ‘தேவகோட்டை நகராட்சிக்குட்பட்ட சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அவரவர்கள் தாமாகவே முன் வந்து அகற்ற வேண்டும். 3 தினங்களுக்குள் அப்புறப்படுத்த தவறும்பட்சத்தில் நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தும். அதன் செலவு தொகையை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து வசூல் செய்யப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: