கோடை விடுமுறையால் கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

 

மண்டபம்,மே 6: மன்னார் வளைகுடா தென் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள மண்டபம் சிறப்பு நிலை பேரூராட்சி கடற்கரை பூங்காவில், கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். மண்டபம் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு சொந்தமான கடற்கரை பூங்கா ராமநாதபுரம்-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மண்டபம் பகுதியில் இருந்து பாம்பன் சாலை பாலம் நுழைவுப் பகுதியில் தென் கடலோரப் பகுதி கரையில் அமைந்துள்ளது. இந்த பூங்காவில் பள்ளிகள் மட்டும் கல்லூரிகளுக்கு விடப்பட்ட கோடை விடுமுறையால் அதிகமான சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் வந்து குவிந்தனர்.

தன் பின்னர் சுற்றுலாவாசிகள் கடற்கரை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு சாதனங்களில் சுற்றுலா பயணிகளின் குழந்தைகள் ஊஞ்சல் மற்றும் சறுக்கு மற்றும் ஏணிகளில் விளையாடி மகிழ்ந்தனர். அதுபோல சில சுற்றுலா பயணிகள் வெயிலின் தாக்கத்திற்கு கடலில் நீராடினார்கள். கடற்கரை பூங்காவில் சவுக்கு மரங்கள் அதிகமாக உள்ளதால், அந்த நிழலிலும், பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தென்னங்கீற்று கூடாரத்திலும் சுற்றுலா வாசிகள் அமர்ந்து தங்கள் உணவுகளை பகிர்ந்து கொண்டு பொழுது போக்கினர். மண்டபம் பேரூராட்சி கடற்கரை பூங்கா சுற்றுலா வாசிகள் வருகை அதிகரித்ததால் திருவிழா நிகழ்ச்சி போல் காட்சியளித்தது.

The post கோடை விடுமுறையால் கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: