காந்தி ஜெயந்தியையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராமசபை கூட்டம்

ஊட்டி, அக்.2:  நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தினமான இன்று 2ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது: காந்தி ஜெயந்தியையொட்டி இன்று 2ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் குறித்து விவாதித்தல், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல் போன்ற தலைப்புகளில் விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல் மற்றும் இதர பொருள் ஆகியவையும் விவாதிக்கப்பட உள்ளது. எனவே ஊராட்சி பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Related Stories: