333 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் மாஸ்க், சமூக இடைவெளி அவசியம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை

கிருஷ்ணகிரி, அக்.1: கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளிலும், நாளை (2ம்தேதி)  காலை 11 மணியளவில், கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அரசு விதித்துள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து கலந்துகொள்ள வேண்டும். கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள பொது வெளியில், ஒவ்வொருவரும் 6 அடி இடைவெளியில் அமர வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தொடர்புடைய அறிகுறிகள் உள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் கலந்துகொள்ள கூடாது. கொரோனா தொற்று காரணமாக தனிமைபடுத்தப்பட்டு உள்ளவர்கள், கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது. கிராம சபைக் கூட்டத்தை மேற்பார்வையிட, ஊராட்சி அளவில் தொகுதி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே, அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: