போட்டி தேர்வுகளுக்கு இணையவழி பயிற்சி

ஈரோடு, செப்.25:போட்டித்தேர்வுகளுக்கு இணைய வழியில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் கதிரவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக இரண்டாம் நிலை காவலர், இண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய 10,906 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு இணையவழி விண்ணப்பம் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் 26ம் தேதி ஆகும். டிச.13ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற வசதியாக ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக போட்டித்தோ–்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இணையவழியில் வரும் 1ம் தேதி முதல் நடத்தப்பட உள்ளன.

எனவே, இத்தேர்விற்கு விண்ணப்பிக்க உள்ள மனுதாரர்கள் இணையவழி பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0424-2275860 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Related Stories:

>