10ம் வகுப்பு வினாத்தாள் வந்தது 7 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஈரோடு, மார்ச் 19:  10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் ஈரோடு மாவட்டத்திற்கு வந்தது. இவை அைனத்தும் 7 மையங்களில் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 27ம் தேதி துவங்க உள்ளது. இத்தேர்வானது ஏப்.13ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வை ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி, சத்தி என 5 கல்வி மாவட்டங்களில் 25 ஆயிரத்து 809 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இத்தேர்விற்காக வினாத்தாள் நேற்று முன்தினம் இரவு ஈரோடு வந்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு கல்வி மாவட்டத்திற்கு வினாத்தாள் காந்திஜி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, தாளவாடி ஆகிய வினாத்தாள் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன. பின்னர், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், தேர்வுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் வினாத்தாள் மையத்திற்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த 7 வினாத்தாள் மையங்களிலும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Related Stories:

>