தொழிலாளி தற்கொலை

ஈரோடு, மார்ச் 19: கோபி அடுத்துள்ள டி.என்.பாளையம் காலனியை சேர்ந்தவர் கண்ணன் (49). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுமதி. கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். கண்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 16ம் தேதி இரவு மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கண்ணன் வீட்டின் விட்டத்தில் தூக்குப்போட்டு கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கண்ணனின் தந்தை, அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>