லோடு ஆட்டோவால் விபத்து அபாயம்

சிவகாசி, மார்ச் 18: சிவகாசி பகுதியில் லோடு ஆட்டோவில் பள்ளி மாணவர்கள், ஆட்களை ஏற்றி செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட்டால் உயிர் சேதம் ஏற்படும் ஆபத்து நிலவுகிறது. சிவகாசி பகுதியில் காவல் துறையினர் திரும்பிய பக்கமெல்லாம் வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிக்கின்றனர். ஆனால் லோடு ஆட்டோக்களில் ஆட்களை ஏற்றி செல்வோர் மீது வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. மக்கள் கூறுகையில், லோடு ஆட்டோவில் ஆட்களை ஏற்றி செல்ல கோர்ட் தடை விதித்துள்ளது. மேலும் லோடு ஆட்டோவில் ஆட்களை ஏற்றி சென்றால் அந்த வாகனத்தில் உரிமத்தை ரத்து செய்வதோடு ஓட்டுனரின் உரிமத்தையும் பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் போலீசார், போக்குவரத்து ஆய்வாளர்கள் லோடு ஆட்டோவில் ஆட்களை ஏற்றி செல்வோர் மீது நடவடிக்கை எடுப்பதில் மெத்தனமாக உள்ளனர். சிவகாசி பகுதியில் வேலைக்கு செல்வோரை லோடு ஆட்டோவில் ஏற்றி செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட்டால் உயிர் பலி அதிகரிக்கும் ஆபத்து நிலவுகிறது. இதே போன்று பள்ளி நேரங்களில் அரசு பஸ் வசதி இல்லாத கிராமங்களில் படிக்கும் பள்ளி குழந்தைகளும் லோடு ஆட்டோவில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. லோடு ஆட்டோவில் ஆட்களை ஏற்றி செல்வோர் மீது போக்குவரத்து ஆய்வாளர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: