ராஜபாளையத்தில் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

ராஜபாளையம், மார்ச் 18: ராஜபாளையத்தில் கால்நடை பல்கலைக்கழகம் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் 19ம் தேதி விஞ்ஞான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கொட்டகை அமைத்தல், தீவனம் மற்றும் இதர பராமரிப்பு முறைகள், நாட்டு கோழிகளை தாக்கும் நோய்கள், அதை தடுக்கும் முறைகள் மற்றும் விற்பனை வாய்ப்புகள் பற்றி விரிவாக பயிற்சி அளிக்க உள்ளனர். இதில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது பெயரை இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தொலைபேசி எண் 04563 220244 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். முதலில் வரும் 25 நபர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி அளிக்க இருப்பதால் முன்பதிவு அவசியம். மையம் தற்போது ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வருகிறது. எனவே இந்த அரிய வாய்ப்பினை கால்நடை வளர்ப்போர் தொழில் முனைவோர்கள், இளைஞர்கள் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பயன்படுத்திக் கொள்ளுமாறு மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் பழனிசாமி அறிவித்தார்

Related Stories: