அரசாணை வெளியிடாத தமிழக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்

மதுரை, மார்ச் 17: தேவேந்திரகுல வேளாளர்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி மருதநாட்டு வேங்கைகள் சார்பில் உண்ணாவிரதம் நடத்துவது என்று அந்த அமைப்பின் மாநில செயற்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மதுரையில் நடந்த இக்கூட்டத்திற்கு நிறுவன தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான 7 உட்பிரிவு மக்களை ஒன்றிணைத்து, தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும். பட்டியலில் உள்ள தேவேந்திரகுல வேளாளர்களை நீக்கி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க காலம் கடத்தும் தமிழக அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், அதனை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். மத்திய அரசிடம் இருந்து, தமிழகத்திற்கு அதிகப்படியான மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்த தமிழக முதல்வரை பாராட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: