மேலூர், மார்ச் 17: கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளுக்கான திமுக கிளை கழக தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று நடைபெற்றது. மதுரை கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளின் திமுக கிளை கழக நிர்வாகிகளுக்கான தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று நடைபெற்றது. கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தேர்தல் பார்வையாளராக மகேஷ் தலைமையில் பார்வையாளர்கள் வெங்கடேசன், சேகர், தனசெல்வம், நேருபாண்டியன் பங்கேற்றனர்.