இடைப்பாடி நகராட்சி சார்பில் அரசு பஸ்களுக்கு

கிருமி நாசினி தெளிப்புஇடைப்பாடி, மார்ச்13: தமிழக அரசு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. சேலம் கலெக்டர் ராமன், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இதன்படி, இடைப்பாடி நகராட்சி ஆணையாளர் சென்னகிருஷ்ணன், துப்புரவு அலுவலர் செந்தில்குமார், துப்புரவு ஆய்வாளர் தங்கவேலு, ஜான்விக்டர், நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் மேற்பார்வையில், இடைப்பாடி பேருந்து நிலையத்தில் வெளி மாவட்டத்தின் இருந்து அரசு, தனியார் பேருந்துகளுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

மேலும் நகராட்சி 30 வார்டுகளில் நகராட்சி நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும் என டாக்டர் சுகன்யா செயல் விளக்கம் செய்து கண்பித்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளிகளின் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Related Stories: