பொதுமக்கள் எதிர்பார்ப்பு பள்ளி மேலாண்மை, வளர்ச்சிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்

பாடாலூர், மார்ச் 12: ஆலத்தூர் ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி கருத்தாய்வு மையத்திற்கு உட்பட்ட பள்ளி மேலாண்மை குழு மற்றும் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. பாடாலூர் கருத்தாய்வு மைய தலைமை ஆசிரியர் நல்லுசாமி தலைமை வகித்தார். ஆலத்தூர் வட்டார கல்வி அலுவலர் சாந்தப்பன் முன்னிலை வகித்தார். பாடாலூர் ஊராட்சி தலைவி நாகஜோதி, கல்வியாளர் சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினர்.

வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) பன்னீர்செல்வம், இரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை ஜெயச்சித்ரா ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டு குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம், கல்வியில் புதுமைகள், பேரிடர் மேலாண்மை, பாலின வேறுபாடு களைதல், குழந்தைகளின் உரிமைகள், பள்ளி முழுமை தரநிலை மற்றும் மதிப்பீடு, கற்றலின் விளைவுகள், அரசு பள்ளியில் ஏற்படுத்தி இருக்கும் அடிப்படை வசதிகள், தூய்மை பள்ளி, கனவு பள்ளி, போக்சோ சட்டம், பள்ளி வளர்ச்சி திட்டம், கல்வி சீர் திருவிழா உட்பட பல தலைப்புகளில் பயிற்சி அளித்தனர் .பயிற்சியில் பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி கருத்தாய்வு மையத்திற்கு உட்பட்ட 10 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் இருந்து தலா 6 பேர் வீதம் 60 உறுப்பினர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர். பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Related Stories: