தர்மபுரியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

தர்மபுரி, மார்ச் 12: தர்மபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் பரவலாக பெய்த போதும், நடப்பாண்டில் மார்ச் மாதம் தொடங்கியதுமே வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இரவில் வெப்பக்காற்று வீசுகிறது. நேற்று முன்தினம் 95 டிகிரியாகவும், நேற்று 96 டிகிரி பாரன்ஹீட்டாகவும் அதிகரித்தது. வெயில் அதிகமாக நிலவுவதால், பகல் நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்துள்ளது. வெயிலை தணிக்க வெள்ளரிப்பழம், முலாம்பழம், நுங்கு, எலுமிச்சை ஜூஸ் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.

Related Stories: