பலாத்கார முயற்சியில் 3 பேர் கொலை சம்பவத்தில் பட்டறை அதிபரை கொன்று வெள்ளியை கொள்ளையடிக்க வந்ததாக வாக்குமூலம்

சேலம், மார்ச் 11: சேலத்தில் பலாத்கார முயற்சியில் தம்பதிகள் உள்பட 3 பேரை கொலை செய்தவர்கள், கொள்ளையடிக்கும் நோக்கத்திலும் வந்தது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. சேலம் அருகேயுள்ள பெருமாம்பட்டி கில்லான் வட்டத்தை சேர்ந்தவர் தங்கராஜ். வெள்ளிப்பட்டறை அதிபர். இவரது பட்டறையில் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகேயுள்ள ராகேஷ் நகரை சேர்ந்த ஆகாஷ் (23), இவரது மனைவி வந்தனாகுமாரி (21) ஆகியோர் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது. இவர்களின் குழந்தையை பார்த்துக்கொள்வதற்காக ஆகாஷின் உறவினர் மகன் சன்னிக்குமாரை(15) உதவிக்கு அழைத்து வந்திருந்தனர்.இந்நிலையில்  கடந்த 8ம் தேதி ஆகாஷ் அவரது மனைவி, சிறுவன் சன்னி குமார் ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர  விசாரணையில் இறங்கினர். அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஆகாஷின் வீட்டில் இருந்து 5 வாலிபர்கள் வெளியே வந்தது பதிவாகியிருந்தது.

அவர்கள், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே மஹாவீர் நகரை சேர்ந்த வினோத் (28), குபேர்பூரை சேர்ந்த அஜய்குசேவ் (25), பிரகாஷ் நகரை சேர்ந்த சுராஜ் சிங் (25), தினேஷ் (27), விஜி (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த 7ம் தேதிதான் சேலத்துக்கு வந்து தங்கராஜ் பட்டறையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். ஆகாஷ் தங்கியிருந்த வீட்டருகே தங்கராஜுக்கு சொந்தமான வீட்டில் தங்கியுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், கேரளாவிற்கு அவர்கள் தப்பிச் சென்றது தெரியவந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று, வினோத், அஜய், சுராஜ் ஆகிய 3 பேரை  மடக்கி பிடித்தனர். மற்ற இருவரும் தப்பியோடி விட்டனர். இவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வந்தனாகுமாரியை பலாத்காரம் செய்ய முயன்றதும், அதில் ஏற்பட்ட மோதலில் அவரையும், தடுக்க வந்த கணவரையும், உறவினர் மகனையும் கொன்றதாக தெரிவித்தனர். அதே நேரத்தில் அடுத்தடுத்த விசாரணையில் இவர்கள் 5 பேரும், பட்டறை அதிபரிடம் கொள்ளையிட திட்டமிட்டதாக வாக்குமுலம் கொடுத்துள்ளனர். அதன் எதிரொலியாகவே இந்த கொலைகளை செய்த திடுக்கிடும் தகவல் அம்பலமாகி உள்ளது.

ஆகாஷ் வேலை செய்த தங்கராஜின் வெள்ளிப்பட்டறையில் 20க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். அவரது வீட்டில் எப்போதும் 300 கிலோவுக்கு மேல் வெள்ளிக்கட்டிகள் இருக்கும். இந்த வெள்ளி கட்டிகளை கொள்ளையடிக்கும் நோக்கத்தோடுதான் 5பேரும் சேலம் வந்துள்ளனர்.

 ஊரில் இருந்து வரும் போதே 3 கத்திகளை வாங்கி வைத்துள்ளனர். கொலை ந்ந்த அன்று வெள்ளிபட்டறை அதிபர் தங்கராஜை கொலை செய்து விட்டு, வெள்ளி பொருட்களை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி அதனை ஆகாஷிடம் தெரிவித்தள்ளனர்.  இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆகாஷ், இதற்கு மறுப்பு தெரிவித்து அவர்களிடம் சத்தம் போட்டுள்ளார். தங்களது ரகசிய திட்டம் வெளியே தெரிந்ததால் தங்களை காட்டிக்கொடுத்து விடுவான் என்று அதிர்ச்சியடைந்து அவரது வீட்டிற்கு சென்று ஆகாஷையும் தடுக்க வந்த மற்ற இரவரையும் சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர். அப்போது வந்தனா குமாரியை பலாத்காரம் செய்ய முயன்றதும் ெதரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் தப்பியோடிய தினேஸ், விஜியை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா, உத்தர பிரதேசத்துக்கு விரைந்துள்ளனர். இதனிடையே கொலையானவர்களின் உறவினர்கள் 5 பேர் நேற்று சேலம் இரும்பாலை போலீஸ் ஸ்டேசனுக்கு வந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்ட 3பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊருக்கு கொண்டு செல்வதாக கூறினர். இதையடுத்து பெங்களூர் கொண்டு சென்று அங்கிருந்து விமானம் மூலம் ஆக்ராவுக்கு கொண்டு செல்ல போலீசார் உதவி செய்தனர். இதையடுத்து நேற்று மாலை  மூவரின் உடல்களும் பெங்களூர் கொண்டு செல்லப்பட்டது.

Related Stories: