ராஜபாளையத்தில் இந்திய அரசியலமைப்பு தின கருத்தரங்கம்

ராஜபாளையம்,  மார்ச் 11: ராஜபாளையத்தில இந்திய அரசியலமைப்பு தின கருத்தரங்கம் நடைபெற்றது. இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையட்டு அமைச்சகம் நேரு யுவகேந்திரா விருதுநகர் மற்றும் முகவூர் காமராஜர்  யூத் ஸ்போர்ட்ஸ் கிளப்  சார்பில் ராஜபாளையம் ஸ்ரீமதி ஏ.கே.டி சக்கணியம்மா பெண்கள் கல்வியியல்  கல்லூரியில்  வைத்து இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்து.  இந்நிகழ்ச்சியில்  நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர்  ஞானச்சந்திரன் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர்  டாக்டர் அகிலா ரூபி  சாந்தகுமாரி  முன்னிலை வகித்தார். துணை முதல்வர் காளீஸ்வரி  வரவேற்றார்.

பின்பு  மக்கள் கல்வி நிறுவனத்தின் திட்ட  அலுவலர் கிருஷ்ணசாமி மற்றும் விருதுநகர் மாவட்ட திட்ட மேலாளர் ராஜ்குமார்,  காமராஜர் யூத் ஸ்போர்ட்ஸ் க்ளப் செயலாளர் கணேசன்  கருத்துரை வழங்கினர்.  இறுதியாக இந்திய அரசியலமைப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. இந்திகழ்க்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு இந்திய  அரசியலமைப்பு சட்ட, திட்டங்களை தெரிந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை ஸ்ரீமதி சக்கணியம்மா பெண்கள் கல்வியியல் கல்லூரி நிர்வாகத்தினர்  செய்திருந்தனர்.

Related Stories: